அதிரடி வேட்டை – யானைத் தந்தம், சந்தனப் பேழையுடன் சிக்கிய புள்ளி!

அதிரடி வேட்டை – யானைத் தந்தம் சந்தனப் பேழையுடன் சிக்கிய புள்ளி!

💥 நிட்டம்புவ நகரில் நள்ளிரவு பரபரப்பு – வனவிலங்கு அதிகாரிகள் மாஸ் ஆபரேஷன்!

💥இலங்கையின் அரிய வகை இயற்கை செல்வங்களை சட்டவிரோதமாக விற்க முயன்ற கும்பலுக்கு வனவிலங்கு அதிகாரிகள் மரண அடி கொடுத்துள்ளனர்! 🪵🐘

 

🕵️ நடந்த பின்னணி என்ன?

ஹொரகொல்ல தேசியப் பூங்காவின் உளவுப் பிரிவினருக்கு கிடைத்த ‘டாப் சீக்ரெட்’ தகவலின் அடிப்படையில், கடந்த 3ஆம் தேதி நிட்டம்புவ நகரில் அதிகாரிகள் திடீர் வியூகம் அமைத்து மின்னல் வேக சோதனையை நடத்தினர். ⚡

 

📦 சிக்கிய அரிய வகை கடத்தல் பொருள்!

விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட, பார்ப்பவர்களை வியக்க வைக்கும் யானைத் தந்தம் மற்றும் அரிய சந்தன மரத்தால் மிக நுணுக்கமாக செய்யப்பட்ட சொகுசுப் பேழை (Box) ஒன்றை அதிகாரிகள் கச்சிதமாகக் கைப்பற்றினர். இதனை விற்க முயன்ற முக்கிய சந்தேக நபர் ஒருவர் ஸ்பாட்டிலேயே அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்! 🧳🔒

 

⚖️ நீதிமன்றத்தில் ஆஜர்..

கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி மதிப்புள்ளcase சொத்துக்களும் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர். 🏛️👨‍⚖️

 

⚠️ சட்டம் என்ன சொல்கிறது?

வனவிலங்கு மற்றும் தாவரப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தின்படி, பாதுகாக்கப்பட்ட விலங்குகள் மற்றும் தாவரங்களின் பாகங்களை வைத்திருத்தல், காட்சிப்படுத்துதல், கடத்துதல் அல்லது விற்பனை செய்வது பிணையில் வர முடியாத பெரும் குற்றமாகும்! 🚫

 

🏆 இந்த மாஸ் ஆபரேஷனை நடத்திய ‘ரியல் ஹீரோக்கள்’..

ஹொரகொல்ல தேசியப் பூங்காவின் பூங்கா காப்பாளர் திரு. பி.ஏ.எஸ்.யு. பண்டார தலைமையில்.

♦️ வனவிலங்கு கள உதவியாளர் – எஸ்.டபிள்யூ.என்.எஸ். சேனதீர

♦️ வனவிலங்கு காப்பாளர் – ஆர்.எம்.பி. விஜேசிங்க

♦️ சஞ்சீவனி

♦️ கள உதவியாளர் – சமீர உடுபோரோவ

♦️ சாரதி – ஆர்.எஸ்.எஸ். ரத்னசேகர

ஆகியோர் அடங்கிய அதிரடிப் படையினர் இந்த சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளனர்!

Recommended For You

About the Author: admin