தியாகி பொன் சிவகுமார் அவர்கன் 52வது நினைவுநாள் 05.06.2026..
முதல் மாவீரன் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 52வது ஆண்டு நினைவேந்தல்
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில், தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னுயிரை அர்ப்பணித்த முதல் மாவீரனாகப் போற்றப்படும் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 52வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, 05.06.2026 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில், அவரது நினைவுத் திருவுருவச் சிலை அமைந்துள்ள உரும்பிராய் பொதுச்சந்தை வளாகத்தில் மரியாதையுடனும் உணர்வுபூர்வமாகவும் நடைபெற்றது.
மண்ணையும் மக்களையும் மொழியையும் நேசித்து, தமது இலட்சியத்திற்காக உயிரை அர்ப்பணித்த முதல் மாவீரன் பொன். சிவகுமாரன் அவர்களின் தியாகம், தமிழர் வரலாற்றில் என்றென்றும் அழியாத நினைவாக நிலைத்திருக்கும். அவரது அர்ப்பணிப்பும் வீரமும் இன்றும் பல தலைமுறைகளுக்கு ஊக்கமாகவும் வழிகாட்டியாகவும் விளங்குகின்றன.
“உயிர் மறைந்தாலும், இலட்சியம் மறையாது;
முதல் மாவீரன் பொன். சிவகுமாரன் நினைவு என்றும் நிலைத்திருக்கும்.

