விஷம் கலந்த கள்ளச்சாராயத்திற்கு 19 பேர் பலி!”

விஷம் கலந்த கள்ளச்சாராயத்திற்கு 19 பேர் பலி!”. நள்ளிரவில் அரங்கேறிய தீவிர வேட்டை. 42000லி கெமிக்கல் அழிப்பு. போலீஸ் அதிரடி ஆக்ஷன்..!!!

புனே மற்றும் பிம்ப்ரி-சின்ச்வத் பகுதிகளில் விஷம் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் அடுத்தடுத்து 19 அப்பாவி மனிதர்கள் பரிதாபமாக உயிரிழந்த மாபெரும் விபரீதச் சம்பவத்தைத் தொடர்ந்து, அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பிறப்பித்த அதிரடி உத்தரவின் பேரில் ஒட்டுமொத்த மகாராஷ்டிர போலீசாரும் நள்ளிரவில் நடத்திய கூட்டு வேட்டையில் ஆயிரக்கணக்கான லிட்டர் கள்ளச்சாராயமும் நச்சு கெமிக்கல்களும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

 

கள்ளச்சாராய மரணங்களைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 48 மணி நேரமாகப் போலீசார் மற்றும் மாநில கலால் துறையினர் போர் முனையைப் போலக் களம் இறங்கி 43-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் மெகா சோதனைகளை நடத்தியுள்ளனர்.

 

இந்த அதிரடி ஆபரேஷனில் புனே மற்றும் பிம்ப்ரி பகுதிகளில் மட்டும் சுமார் 4,480 லிட்டர் நாட்டுச் சாராயமும், அதைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 42,001 லிட்டர் ஆபத்தான நச்சு ரசாயனங்களும் ஸ்பாட்டிலேயே வளைத்துப் பிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதோடு, இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 52 குற்றவாளிகள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கள்ளச்சாராயத்தின் மெகா பின்னணியை ஆராய்ந்த போலீசாரின் விசாரணையில் இதன் முக்கியக் புள்ளிகள் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதி வரை நீண்டுள்ளது தெரியவந்ததோடு, அங்குள்ள ஒரு ரகசியக் கிடங்கில் நள்ளிரவில் எஃப்டிஏ (FDA) அதிகாரிகள் நடத்திய திடீர் ரெய்டில் கள்ளச்சாராயம் காய்ச்சப் பயன்படுத்தப்படும் 5,929 லிட்டர் மெத்தனால் (Methanol) என்ற ஆபத்தான நச்சு திரவமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

மேலும், சாங்க்லி மாவட்டத்தில் ஓடைப் பகுதியில் இயங்கி வந்த மாபெரும் கள்ளச்சாராய ஆலையைப் போலீசார் நேரடியாக ஜேசிபி (JCB) இயந்திரத்தைக் கொண்டு அக்மார்க் தரைமட்டமாக்கி 750 லிட்டர் கெமிக்கலை அழித்துள்ளதோடு, நாக்பூர் பகுதியிலும் பெண் சாராய வியாபாரிகள் உட்பட 56 பேர் மீது அதிரடியாகக் வழக்குகள் பாய்ந்துள்ளன.

 

“இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகுதான் போலீசாருக்கு தூக்கம் கலைந்து விழித்துக் கொள்வார்களா? இத்தனை வருடங்களாகப் போலீசாரின் மூக்கிற்கு அடியிலேயே இந்த அராஜகம் நடந்தபோது என்ன செய்து கொண்டிருந்தார்கள்?” என உள்ளூர் பொதுமக்கள் தங்களது குமுறல்களையும் காரசாரமான கேள்விகளையும் அள்ளி வீசி வரும் இந்த செய்தி, தற்பொழுது சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி செம வைரலாகி வருகிறது.

Recommended For You

About the Author: admin