சமூகப் பிறழ்வை கட்டுப்படுத்த யாழ்ப்பாணக் கோட்டை தூய்மைப்படுத்தல்

யாழ்ப்பாணக் கோட்டையில் இடம்பெறும் நாகரீகமற்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்குடன் தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம்  இன்று காலை முதல் இடம்பெற்று வருகின்றது.

தொல்பொருள் திணைக்களம், யாழ்.மாநகர சபை, யாழ்.பிரதேச செயலகம் இணைந்து முன்னெடுக்கும் இந்தச் செயற்றிட்டம் யாழ்.கோட்டைப் பகுதியில் இன்று (14- 10- 2022) வெள்ளிக்காலை 7.30 மணியளவில் ஆரம்பித்தது.

இதன்மூலம் கோட்டைப் பகுதியில் இடம்பெறும் சமூகப் பிறழ்வான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தச் செயற்றிட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்தினர், யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள்,
யாழ்.பிரதேச செயலகப் பணியாளர்கள், சமூக மட்ட அமைப்புக்கள், வர்த்தகர்கள், தன்னார்வ தொண்டு அமைப்புக்கள், இளையோர் அமைப்புக்கள் எனப் பலரும் இணைந்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor