யாழ். நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து: படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி பலி!
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்திருந்தஒருவர், சிகிச்சை பலனின்றி நேற்று (2026 மார்ச் 25, புதன்கிழமை) யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் நாவலர் வீதியைச் சேர்ந்த கனகரத்தினம் கனகதாசன் (62 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 18 ஆம் திகதி யாழ். நகர் பகுதியில் இவர் பயணித்த போது மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
: ஒரு வார காலமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துத் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தொடர்பிலும், விபத்துக்கான காரணம் குறித்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

