சுற்றுலாத் தளங்களில் தாக்குதல் நடத்துவோம்! : ஈரானின் அதிரடி எச்சரிக்கை
ஈரான் மற்றும் அதன் எதிரி நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானிய இராணுவப் பேச்சாளர் ஜெனரல் அபுல்பாஸ்ல் ஷெகர்ச்சி (Abolfazl Shekarchi) விடுத்துள்ள அறிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பூங்காக்கள், பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் சுற்றுலாத் தளங்கள் என உலகம் முழுவதும் பரவியுள்ள பொது இடங்கள் எமது எதிரிகளுக்கு இனிப் பாதுகாப்பானதாக இருக்காது என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளை அவர்கள் போர் வலயத்திற்கு வெளியே தனிப்பட்ட பயணங்களில் இருக்கும் போது கூட, உலகம் முழுவதும் தேடித் பிடித்து வேட்டையாடப் போவதாக ஈரான் சபதம் எடுத்துள்ளது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள இந்தத் தகவலானது, மத்திய கிழக்குக்கு வெளியேயும் ஈரான் தனது தாக்குதல்களைப் பரப்பத் திட்டமிட்டுள்ளதா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், ஈரானின் இந்த நேரடி அச்சுறுத்தல் சர்வதேசப் பயணங்கள் மற்றும் சுற்றுலாத்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனது எதிரிகள் எங்கிருந்தாலும் அவர்களைக் கண்காணித்து வருவதாகவும், தற்காப்பு என்ற பெயரில் எங்கும் தாக்குதல் நடத்தத் தயங்கப் போவதில்லை எனவும் ஈரான் இதன் மூலம் உலகிற்குத் தெரிவித்துள்ளது.

