ரமழான் மனிதநேயம் மற்றும் சகோதரத்துவத்திற்கான ஒரு சக்திவாய்ந்த பாடமாக அமைகிறது – ஜனாதிபதி அநுர விசேட பெருநாள் வாழ்த்து
துல் பித்ர் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்குத் தனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, ரமழான் நோன்பு என்பது உலகளாவிய சமூகத்திற்கு ஒரு சக்திவாய்ந்த மனிதாபிமான செய்தியை வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பசி மற்றும் தாகத்தைப் பொறுத்துக்கொள்வதன் மூலம் பிறரின் வலியைத் தனது வலியாக உணரும் பண்பை ரமழான் போதிக்கிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமாதானம், சமத்துவம் மற்றும் சகவாழ்வு ஆகிய உன்னத விழுமியங்கள் விசுவாசிகளின் நடத்தையை மேலும் செழுமைப்படுத்துவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, உலகம் தற்போது எதிர்கொண்டுள்ள கடினமான மற்றும் சவாலான சூழலில் இந்தப் பிரார்த்தனைகள் அமைதியைக் கொண்டுவரட்டும் என வாழ்த்தினார்.
மக்களின் உரிமைகளும் சுதந்திரமும் பாதுகாக்கப்படும் ஒரு சுபீட்சமான உலகத்தை உருவாக்குவதே எமது அபிலாஷை எனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சவால்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காமல் முன்னேற்றமடையச் செய்ய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி உறுதி அளித்தார்.
பேதங்களை மறந்து இந்தத் தேசிய முயற்சியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்த அவர், “ஈத் முபாரக்” எனத் தனது வாழ்த்துகளை நிறைவு செய்தார்.

