நாளை மறுதினம் புனித நோன்புப் பெருநாள்! – கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வ அறிவிப்பு!
ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எந்தவொரு பகுதியிலும் இன்று தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. புதிய மாதத்திற்கான பிறையைத் தீர்மானிக்கும் விசேட மாநாடு இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.
இதற்கமைய, நாளை மறுதினம் சனிக்கிழமை (மார்ச் 21) புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடுமாறு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்குப் பிறைக்குழுவின் தலைவர் அஷ்ஷெய்க் ஹிஸாம் அல் பத்தாஹி அறிவித்துள்ளார்.

