போர் லெபனான் மற்றும் மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகிறது.

போர் லெபனான் மற்றும் மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகிறது.

ஈரான்–இஸ்ரேல் மோதல் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில், லெபனான் தலைநகரின் மத்திய பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. Bashoura உள்ளிட்ட நகரின் மக்கள் நெருக்கம் அதிகமான பகுதிகளில் நடந்த இந்த தாக்குதலில் பலர் காயமடைந்ததுடன் ஒரு கட்டிடம் கடுமையாக சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் தரப்பு, ஈரானின் ஆதரவு பெற்ற அமைப்பின் உட்கட்டமைப்புகள் மற்றும் தொடர்புடைய இலக்குகளை குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல், ஈரான்–இஸ்ரேல் போர் பின்னணியில் லெபனானிலும் மோதல் விரிவடைவதை காட்டுவதாக நோக்கப்படுகிறது. சமீப வாரங்களில் லெபனானில் நடைபெறும் தாக்குதல்களால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததுடன், பல இலட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin