உலக பொருளாதாரம் சரிவினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இது ஈரானால் அல்ல.
கடந்த 16 நாட்களாக தைவான் எல்லைக்கு அருகே அமைதி நிலவியது. “சீனா ஒருவேளை அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார் ஆகிறதோ?” என்று கணித்துக் கொண்டிருந்த வேளையில், மார்ச் 14 மற்றும் 15 தேதிகளில் அந்த அமைதி சுக்குநூறாக உடைந்தது.
26 போர் விமானங்கள் தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் (ADIZ) நுழைந்தன.
7 கடற்படை கப்பல்கள் தீவைச் சுற்றி வளைத்து அணிவகுத்து நின்றன.
இது கடந்த சில வாரங்களில் காணப்பட்ட மிகப்பெரிய இராணுவ நடமாட்டமாகும்.
இந்த இராணுவத் தாக்குதல் முயற்சி தற்செயலானது அல்ல என்பதை அதன் ‘Timing’ உறுதிப்படுத்துகிறது.
சரியாக அதே நாளில், அமெரிக்கா தனது படைகளை மத்திய கிழக்கிற்கு (Middle East) அனுப்புவதாக அறிவித்தது.
அமெரிக்கா தற்போது ஈரான் மற்றும் மத்திய கிழக்கு போர்களில் கவனம் செலுத்தி வருகிறது.
தொடர் போர்களால் அமெரிக்காவின் ஏவுகணை கையிருப்பு (Missile Stockpiles) குறைந்துள்ளது.
எண்ணெய் விலை $100-ஐத் தொட்டுக்கொண்டிருக்கும் வேளையில், அமெரிக்காவின் இராணுவக் கவனம் சிதறியுள்ள இந்த தருணம் சீனா இந்த வாரமே தனது அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்தால், அமெரிக்காவிடம் அதற்குப் பதில் இருக்கிறதா என்பதுதான் இப்போதைய மிகப்பெரிய கேள்வி.
தைவான் வீழ்ந்தால் அல்லது அங்கு போர் ஏற்பட்டால், அது வெறும் ஒரு பிராந்தியப் போர் மட்டுமாக இருக்காது, அது ஒரு “உலகளாவிய பொருளாதார சுனாமி” ஆக உருவெடுக்கும்.
உலகின் 90% மேற்பட்ட Semi conductor chips தைவானில் (TSMC) உற்பத்தியாகின்றன. போர் ஏற்பட்டால் smartphone, computer , AI servers உற்பத்தி முற்றிலுமாக முடங்கும். Nvidia, Apple, மற்றும் Microsoft போன்ற நிறுவனங்கள் தங்களின் அடுத்த தலைமுறை சிப்களுக்கு TSMC-யையே நம்பியுள்ளன. ஒரு சிறிய தடங்கல் ஏற்பட்டாலும், கடந்த 10 ஆண்டுகளில் உலகம்
கண்ட தொழில்நுட்ப வளர்ச்சி அப்படியே நின்றுவிடும்.
முதலீட்டாளர்கள் பீதி அடைவதால் பங்குச்சந்தை (s&p500) 50%வரை விழ வாய்ப்புண்டு.
Crude oil விலையுயர்வால் உலகளாவிய விநியோக சங்கிலி பாதிப்புக்குள்ளாகும். ஏற்கனவே உயர்ந்து வரும் விலவாசிகள், இந்தத் தட்டுப்பாடுகளால் சாமானிய மக்களின் கைக்கு எட்டாத உயரத்திற்குச் செல்லும். குறிப்பாக மின்னணு சாதனங்கள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் விண்ணைத் தொடும்.
Semiconductor தட்டுப்பாட்டால் Automobiles industryகளின் உற்பத்தி முற்றாக தடைப்படும். அல்லது வாகனங்களின் விலை உயரும். நியூயார்க் டைம்ஸ் (New York Times) இதழ் குறிப்பிட்டது போல, அமெரிக்கா நேரடியாகப் போரில் ஈடுபடாவிட்டாலும், chip தட்டுப்பாடு அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியைப் (GDP) பெரிய அளவில் பாதிக்கும். இது 2008 பொருளாதார நெருக்கடியை விட மோசமாக இருக்கக்கூடும்.
தென் சீனக் கடல் உலகின் மிக முக்கியமான வணிகப் பாதை. இது முடக்கப்பட்டால் 5 trillion வரையான கப்பல் போக்குவரத்து வர்த்தகம் பாதிக்கப்படும். 2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை விடவும் மோசமான ஒரு பணவீக்கச் சூழல் உருவாகக்கூடும்.
சுருக்கமாகச் சொன்னால், தைவான் மீதான ஒரு இராணுவ நடவடிக்கை என்பது சர்வதேச விநியோகச் சங்கிலியை (Global Supply Chain) முற்றிலுமாகச் சிதைத்து, அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் பொருளாதாரத்தையே முடக்கும் வல்லமை கொண்டது.
சீனா தைவானை முற்றுகையிடுவது என்பது வெறும் நிலப்பரப்பைக் கைப்பற்றும் நடவடிக்கை மட்டுமல்ல, அது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பொருளாதார முதுகெலும்பை உடைக்கும் ஒரு “Geopolitical Checkmate”ஆகும்.
நவீன மேற்கத்திய வாழ்க்கை முறை என்பது முழுக்க முழுக்க தைவானின் Semiconductor நம்பியே கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை தைவான் வீழ்ந்தால், ஆப்பிள் (Apple), என்விடியா (Nvidia) மற்றும் டெஸ்லா (Tesla) போன்ற அமெரிக்காவின் மாபெரும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியைத் தொடர முடியாமல் முடங்கும்.
இது அமெரிக்கப் பங்குச்சந்தையில் (Wall Street) முன்னெப்போதும் கண்டிராத ஒரு மாபெரும் சரிவை ஏற்படுத்தி, பல டிரில்லியன் டாலர் முதலீடுகளைச் சாம்பலாக்கும்.
அமெரிக்கா ஏற்கனவே பணவீக்கம் மற்றும் கடன் சுமையால் திணறி வரும் வேளையில், போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் விலை $100-ஐத் தாண்டுவது, அந்நாட்டின் நுகர்வோர் சந்தையை முற்றிலுமாக முடக்கும்.
போர்க்கப்பல்கள் மற்றும் ஆயுதங்களுக்காக பில்லியன் கணக்கில் டாலர்களைச் செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது, அமெரிக்காவின் டாலர் மதிப்பு சர்வதேச சந்தையில் பலவீனமடையக்கூடும். ஐரோப்பிய நாடுகளும் எரிசக்தி தட்டுப்பாடு மற்றும் இறக்குமதி முடக்கத்தால் பெரும் பொருளாதார மந்தநிலைக்குத் (Recession) தள்ளப்படும்.
சுருக்கமாகச் சொன்னால், தைவான் மீதான சீனாவின் ஒரு சிறு நகர்வு, கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக உலகம் கண்டு வந்த மேற்கத்திய பொருளாதார மேலாதிக்கத்தைத் தகர்த்து, ஒரு புதிய உலக ஒழுங்கிற்கு (New World Order) வழிவகுக்கும் ஒரு தொடக்கப்புள்ளியாக அமையும்.

