ஈரான் போரில் அமெரிக்காவிற்கு இனி உதவி தேவையில்லை; 

ஈரான் போரில் அமெரிக்காவிற்கு இனி உதவி தேவையில்லை;

நேட்டோ கூட்டாளிகள் ‘முட்டாள்தனமான தவறை’ செய்கிறார்கள் – டிரம்ப் கடும் சாடல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் போரில் நேட்டோ (NATO) மற்றும் பிற நட்பு நாடுகளின் உதவி அமெரிக்காவிற்கு இனி “தேவையில்லை” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

பெரும்பாலான நேட்டோ கூட்டாளிகள் இந்த இராணுவ நடவடிக்கையில் ஈடுபட விரும்பவில்லை என்று கூறியுள்ளதாக அவர் தனது ட்ரூத் சோஷியல் (TruthSocial) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஈரானின் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையை அமெரிக்கா ஏற்கெனவே “முற்றிலும் அழித்துவிட்டது” என்றும், அதனால் கூட்டாளிகளின் உதவி தங்களுக்கு அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

8

மேலும், பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மரின் செயல்பாடுகள் ஏமாற்றமளிப்பதாக அவர் தெரிவித்தார்.

 

இதற்கிடையில், ஈரானின் பாதுகாப்புத் தலைவரும், அயதுல்லா அலி காமேனியின் மறைவிற்குப் பிறகு அந்நாட்டின் முக்கியத் தலைவராகக் கருதப்படுபவருமான அலி லாரிஜானி (Ali Larijani) தங்களது தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

 

எனினும், லாரிஜானி கொல்லப்பட்டதையோ அல்லது காயமடைந்ததையோ ஈரான் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இவருடன் சேர்ந்து பாசிஜ் (Basij) அமைப்பின் தளபதி கோலம்ரேசா சொலைமானியும் (Gholamreza Soleimani) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஈரானிய மக்கள் தங்களது தலைவிதியைத் தாங்களே தீர்மானிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கவே ஈரானிய ஆட்சியின் முக்கிய நபர்களைக் குறிவைப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin