வடமராட்சியில் மாரடைப்பால் இளம் சட்டத்தரணி உயிரிழப்பு
அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இரட்டைக் குழந்தைகளின் தந்தையும் யா/ வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியை விஸ்வேதிகா அவர்களின் கணவரும் இளம் சட்டத்தரணியுமான சிவராசா நிகாஷ் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை தனது பணி முடித்து மாலை 5 மணியளவில் வீடு திரும்பிய போது நெஞ்சுக்குள் ஒரு மாதிரியாக இருப்பதாக மனைவியிடம் கூற, மனைவி இஞ்சிச்சாறு போட்ட தேநீர் வழங்கி உள்ளார். பின்னர் இரவு 7 மணியளவில் உடல்நலம் குறைவினால் உடனடியாக நெல்லியடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறித்த இளவயது மரணம் அப்பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

