போர் முடிந்த பின்பு பெரும் அழிவை சந்திக்க போவது அரபு நாடுகள் தான்..
கதைகளில் மட்டுமே நாம் வாசித்த அந்தப் பழங்குடி இனத்தின் அசாத்தியமான மன உறுதி ஈரானிடம் தெரிகிறது. “மானம் பெரிதென வாழும்” அந்த குணம்—வாழ்ந்தால் கௌரவமாக வாழ்வோம், இல்லையென்றால் போர்க்களத்தில் வீரமரணம் அடைவோம் என்ற பிடிவாதத்துடன் ஈரான் இந்த யுத்த களத்தில் நிற்கிறது.
மறுபுறம், உலகத்தின் அமைதியைக் காக்கும் ‘போலீஸ்காரர்’ என்ற போர்வையில் அமெரிக்கா தனது ‘நாட்டாமை’ மனப்பான்மையைக் காட்டுகிறது. “அடிக்கிற கைதான் அணைக்கும்” என்ற மாய பிம்பத்தை உருவாக்கி, ஈரானைத் தன் வசப்படுத்தத் துடிக்கிறது அமெரிக்கா. ..
அடுத்தவன் குடிகெடுத்தாவது தன் வீடு விளங்கினால் போதும்” என அகண்ட இஸ்ரேல்’ என்ற ஒரு நீண்டகாலச் சதித்திட்டக் கோட்பாடு நிழலாடுவதைத் தவிர்க்க முடியாது. ஈரானுடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டே, மறுபுறம் லெபனானை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கிறது.. உண்மையில் தனது எல்லை விரிவாக்கத்திற்காக ஈரானை போருக்குள்ளே எடுத்து இருக்கிறது இஸ்ரேல்.. அரபு நாடுகள் பற்றி எரிந்தால் தான் எல்லை மறுசீரமைப்பு செய்ய முடியும்.. போர் முடிந்த பின்பு அங்கு இரண்டு தலைமை தான் இருக்கும்.. அகண்ட எல்லையுடன் இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளின் தலைமையாக ஈரான..
இந்த போர் நிறுத்தத்திற்கு ஈரானின் நிபந்தனையை பாருங்கள்..
அக்டோபர் ஏழு தாக்குதலுக்கு முன்பு இருந்த இஸ்ரேல் எல்லைப் பகுதிகளில் பின்னால் செல்ல வேண்டும்..
அரபு நாடுகளில் இருந்து அமெரிக்கா ராணுவத்தளம் அனைத்தும் வெளியேற வேண்டும்..
எங்கள் மீது தாக்குதல் நடத்திய தலைவர்களைக் கொன்ற போர் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.. பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்..
ஈரான் நிச்சயம் போரை நிறுத்தாது.. ஏனெனில் அவர்களின் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுவது போல் தெரிகிறது.. அமெரிக்கா தன் கடனிலிருந்து மீள இந்த போர் சூழ்நிலை பயன்படுத்தி எண்ணெய் விற்பனையை அதிகப்படுத்தும்.. இந்த போரில் அதிக பலன் பெறுவது அமெரிக்காவும் ரஷ்யாவும்..
போர் முடிந்த பின்பு பெரும் அழிவை சந்திப்பது அரபு நாடுகள் தான்..

