பஹ்ரைனில் ஆபத்தில் சிக்கிய அமெரிக்க கடற்படை! ஒரேயடியாக கைவிட்ட டிரம்ப்!

பஹ்ரைனில் ஆபத்தில் சிக்கிய அமெரிக்க கடற்படை! ஒரேயடியாக கைவிட்ட டிரம்ப்! ஈரான் கை ஓங்குது!

வெறுமென இஸ்ரேல் மீது மட்டும் ஈரான் தாக்குதல் நடத்தவில்லை. மாறாக பக்கத்து நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ மையங்கள் மீதும், அமெரிக்காவுக்கு உதவும் நாடுகளின் பொருளாதார மண்டலங்களின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால், பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின், 5வது கடற்படைக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

 

இந்த கடற்படை தளத்திலிருந்து ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் முழு வேகத்தில் களமிறங்கி உள்ளது.

 

அமெரிக்காவின் ராணுவ தளம்

 

அமெரிக்காவுக்கு வளைகுடா நாடுகளில் ராணுவ தளங்கள் பல இருக்கின்றன. அதில் முக்கியமானது, பஹ்ரைனில் உள்ள 5வது கடற்படைப்பிரிவு ஆகும். என்னதான் மற்ற வளைகுடா நாடுகளில் ராணுவ தளம் இருந்தாலும், பஹ்ரைனில் உள்ள கடற்படைத்தளம், அமெரிக்காவின் மொத்த தளத்துக்கும் இதயப்பகுதி போன்றதாகும்.

 

கடல் வழி கச்சா எண்ணெய் விநியாகத்தில் 20% என்பது ஹர்முஸ் நீரினை வழியாகத்தான் பயணிக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நீரினையை பாதுகாக்கும் வேலையை செய்வதுதான் இந்த 5வது கடற்படை தளத்தின் பொறுப்பு.

 

என்ன நடந்தது?

 

இந்த தளம் தொடர்ந்து இயங்க வேண்டும் என்றால் எரிபொருள் முக்கியம். இந்த எரிபொருளை கொடுப்பது பஹ்ரைனில் உள்ள ‘பாப்கோ’ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்தான். ஈரான் இந்த நிலையத்தின் மீதுதான் தாக்குதல் நடத்தியிருக்கிறது. தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது. தாக்குதல் காரணமாக, தற்காலிகமாக நிலையம் மூடப்பட்டிருக்கிறது. ஈரானின் தாக்குதலில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றும், தீ விபத்து கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் பஹ்ரைன் விளக்கமளித்துள்ளது. இருப்பினும் விஷயம் ரொமப்வே சீரியஸாக மாறியிருக்கிறது.

 

ஈரானின் கை ஓங்குது

 

அமெரிக்காவின் ஆயுதம் பலம் ரொம்பவும் பெருசு. நேரடியாக மோதினால் ஜெயிக்க முடியாது என்பதை ஈரான் உணர்ந்திருக்கிறது. எனவே, கிடைக்கும் வாய்ப்புகளில், அமெரிக்காவுக்கான சப்ளை செயினை உடைக்க முயன்று வருகிறது. எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டால், கடற்படையை பலவீனப்படுத்தலாம் என்பதே ஈரானின் எண்ணம்.

 

எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல்

 

பஹ்ரைன் மட்டும் கிடையாது, அமெரிக்காவுக்கு எரிபொருளை விநியோகிக்கும் மற்ற நாடுகளின் எண்ணெய் கிடங்குகள் மீதும் ஈரான் குண்டு வீசியுள்ளது. இந்த தாக்குதலை இந்தியா உள்ளிட்ட நாடுகள் கண்டித்து வருகின்றன. இருப்பினும் தாக்குதலை நிறுத்தப்போவதில்லை என்பதில் ஈரான் உறுதியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin