சுந்தர் பிச்சைக்கு சம்பள உயர்வு.. இத்தனை கோடியா! கூகுள் கொடுத்த மெகா ஆஃபர்!
கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு, அந்நிறுவனம் சமீபத்தில் ஊதிய உயர்வை அறிவித்திருக்கிறது.
இதன் மூலம் உலக அளவில் மிக அதிகம் சம்பளம் பெறும் நபர்களில் ஒருவராக சுந்தர் பிச்சை மாறியிருக்கிறார்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் கொடுக்கும் ஊதிய உயர்வு அதிரடியானதாக இருக்கும். அதிலும் கூகுள் போன்ற நிறுவனங்கள் கொடுக்கும் சம்பள உயர்வு பிரமாண்டதாக இருக்கும். அந்த வகையில் தற்போது சுந்தர் பிச்சைக்கு பெரிய ஜாக்பாட் அடித்திருக்கிறது என்று சொல்லலாம்.
சம்பள உயர்வு
கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சுமார் ₹6,361 கோடி சம்பள தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் உலகின் அதிக சம்பளம் பெறும் தலைவர்களில் ஒருவராகியுள்ளார்.
இது தவிர, அவருக்கு அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.772 கோடி மதிப்புள்ள பங்குகளும் வழங்கப்படும். அடிப்படை சம்பளம் என்று பார்த்தால், ஆண்டுக்கு ரூ.18.32 கோடி வழங்கப்படும். அவர் தொடர்ந்து பணியாற்றும் வரை, இந்த பங்குகள் மாதந்தோறும் அளிக்கப்படும்.
செயல்திறன் பங்கு அலகுகள்
இந்த பங்குகள் சாதாரணமானவை கிடையாது. நிறுவனம் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இந்த பங்கு சுந்தர் பிச்சகைகு கிடைக்கும். அடுத்த 3 ஆண்டுகளை கணக்கில் கொண்டு இந்த பங்குகள் வழங்கப்படுகின்றன. எனவே சுந்தர் பிச்சை, அடுத்த 3 ஆண்டுகளில் நிறுவனத்தின் வளர்ச்சியை கருத்தில் கொள்ள வேண்டும். ஒருவேளை கூகுள் மற்ற போட்டி நிறுவனங்களை விட குறைவான அளிவல் முன்னேறியிருக்கிறது எனில், இந்த பங்குகள் வழங்கப்படமாட்டாது.
பங்கு ஊக்கத்தொகைகள்
இந்த பங்குகள் வெறும் கூகுள் நிறுவனத்துடையது மட்டுமல்ல. ஏனெனில் சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தின் சிஇஒ மட்டும் கிடையாது. அவர் மொத்த ஆல்பபெட் நிறுவனத்திற்கும் இவர்தான் இசிஓ. எனவே, இந்த நிறுவனத்தின் மற்ற கிளை நிறுவனங்களையும் வளர்க்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. எனவே அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் பங்குகள் இந்த கிளை நிறுவனத்திலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது.
1. Waymo
2. Wing
Waymo என்பது தானியங்கி டாக்ஸி நிறுவனமாகும். அதேபோல, Wing என்பது ட்ரோன் டெலிவரி சிஸ்டம் ஆகும். இந்த இரண்டு நிறுவனங்களும் நிர்ணயிக்கப்பட்ட லாபத்தை எட்டினால், சுந்தர் பிச்சைக்கு வழங்க்கப்பட்ட பங்குகளின் மதிப்பும் இரட்டிப்பாகும்.
சுந்தர் பிச்சையின் சொத்து
கடந்த 2015ம் ஆண்டு சுந்தர் பிச்சை, கூகுளின் சிஇஒ-வாக பொறுப்பேற்றார். அப்போது நிறுவனத்தின் மதிப்பு ரூ.49 லட்சம் கோடியாக இருந்தது. இப்போது இது ரூ.331 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. அதேபோல சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பும் ரூ.1.37 லட்சம் கோடியாக மாறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

