ஈரானை தாக்கிய ஐக்கிய அரபு அமீரகம்.. துபாயை தொடர்ந்து குறிவைத்ததால் ஆக்ரோஷம்!

ஈரானை தாக்கிய ஐக்கிய அரபு அமீரகம்.. துபாயை தொடர்ந்து குறிவைத்ததால் ஆக்ரோஷம்! போர் முடிய சான்ஸ் இல்லை

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போரை தொடங்கி உள்ளன. இந்நிலையில் தான் முதல் முறையாக இந்த போரில் ஐக்கிய அரபு அமீரகம் இணைந்துள்ளது.

 

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரகம், ஈரானை தாக்கி உள்ளது. இதன்மூலம் போர் பதற்றம் இன்னும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

 

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போரை தொடங்கி உள்ளன. கடந்த மாதம் 28 ம் தேதி தொடங்கிய இந்த போர் இன்று 9 வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஏவுகணை தாக்குதல், ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது.

 

இதையடுத்து ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் மட்டுமின்றி அமெரிக்காவின் பாதுகாப்பு படை உள்ள சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், ஓமன், ஈராக் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.

 

துபாயை தாக்கிய ஈரான்

 

இந்த நாடுகளை குறிவைத்து ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் அரபு நாடுகள் கோபமடைந்துள்ளனர். இதற்கிடையே தான் நேற்று ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியான் மன்னிப்பு கேட்டார். அதோடு ஈரானை தாக்க அரபு நாடுகள் அனுமதிக்காமல் இருந்தால் அந்த நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று அறிவித்தார். இதனால் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 

ஐக்கிய அரபு அமீரகத்தை எடுத்து கொண்டால் அபுதாபியில் உள் அல் தாப்ரா விமான தளம் உள்ளது. இது அமெரிக்காவுக்கு சொந்தமானது. அமெரிக்காவின் போர் விமானங்கள் இங்கு நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ஈரான் இந்த விமான தளம் மற்றும் துபாய் விமான தளத்தை குறிவைத்து தாக்கி வருகிறது. நேற்றும் துபாயில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து ஈரான் தாக்கியது. இதனால் துபாய் மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர்.

 

ஈரானை தாக்கிய அமீரகம்

 

இதனால் ஈரானுக்கு பதிலடி கொடுக்கவும், அமீரகத்தில் உள்ள ஈரானின் சொத்துகளை முடக்கம் செய்வது பற்றியும் அமீரகம் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் இன்று முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரகம், ஈரானை தாக்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

 

ஈரானின் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தின் மீது ஐக்கிய அரபு அமீரகம் இன்று தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி ஜெருசலேம் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ”கடல்நீரில் இருந்து குடிநீரை பிரித்தெடுக்கும் நிலையத்தின் மீது ஐக்கிய அரபு அமீரகம் தாக்குதல் நடத்தி உள்ளது. இது ஈரானுக்கு எதிரான ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் பதிலடி தாக்குதலாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல் இஸ்ரேல் ஊடகமான Ynet-ம் இந்த தாக்குதல் பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், ”ஈரானுக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகம் ராணுவ நடவடிக்கையை தொடங்கி உள்ளது. ஈரானுக்கு எதிரான போரில் ஐக்கிய அரபு அமீரகம் முதல் வளைகுடா நாடாக இணைந்துள்ளது. இது மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தொடரும் குழப்பம் – பதற்றம்

 

இதற்கிடையே தான் இந்த தகவலை ஐக்கிய அரபு அமீரகத்தின் மூத்த அதிகாரி மறுத்தார். ஈரானில் மக்களின் குடிநீர் பயன்பாட்டுக்கான கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தவில்லை என்று அவர் கூறினார். இது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி இன்னும் ஐக்கிய அரபு அமீரகம் தெளிவான விளக்கத்தை அளிக்கவில்லை. இது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. பதற்றத்தை ்அதிகரித்துள்ளது.

 

அதேவேளையில் அமீரகத்தின் பாதுகாப்பு துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், ”ஈரானின் தாக்குதலால் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. ஈரானால் ஏவப்பட்ட 16 ஏவுகணைகள் வானிலேயே இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளது. 17 வது ஏவுகணை கடலில் விழுந்துள்ளது. அதேபோல் ஈரானின் 117 டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளது. 4 ட்ரோன்கள் நாட்டுக்குள் விழுந்துள்ளது” என தெரிவித்துள்ளது.

 

அதிபர் கொடுத்த வார்னிங்

 

முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் ஜயாத் ல் நஹ்யான் ஈரானுக்கு கடும் வார்னிங் விடுத்திருந்தார். இதுபற்றி அவர் நேற்று ”அமீரகம் பார்க்க அட்ராக்டிவ்வாக இருக்கலாம். இதனால் தோற்றத்தை கண்டு தவறாக எண்ணிவிட வேண்டாம். எங்களை எளிதாக தாக்கி அழிக்கலாம் என்று நினைக்க வேண்டாம். நாங்கள் யாருக்கும் எளிதாக இரையாக மாட்டோம். அமீரகம் உண்மையில் பலமானது. எங்களுக்கு எதிராக செயல்படுவது கடினமானது” என்று வார்னிங் செய்திருந்தார்.

 

இப்படியான சூழலில் தான் ஈரானை முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரகம் தாக்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஈரானுக்கு எதிரான போரில் முதல் நாடாக இணைந்த அரபு நாடு என்ற பெயர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கிடைக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin