ஒரு ‘செலிபிரிட்டி’ என்றால் யார்?.. விஜய்யை காலி செய்ய கிருத்திகா உதயநிதி

ஒரு ‘செலிபிரிட்டி’ என்றால் யார்?.. விஜய்யை காலி செய்ய கிருத்திகா உதயநிதி போட்ட ஒத்த போஸ்ட்… பற்றி எரியும் அரசியல் களம்..!

குறிப்பாக, கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்காமல் மாமல்லபுரத்திற்கு வரவழைத்தது மற்றும் திமுக மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைப்பது போன்ற செயல்கள் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளன. மேலும், விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த செய்திகளும், பொதுவெளியில் அவர் தன்னை முன்னிலைப்படுத்தும் விதமும் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளன.

 

இந்தச் சூழலில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும், இயக்குநருமான கிருத்திகா உதயநிதி, தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. “பிரபலம் என்றால் யார்?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார். ஒரு சாதாரண தனி மனிதனுக்கும், பிரபலமானவருக்கும் இடையிலான வித்தியாசத்தை தீர்மானிப்பது மக்களின் கண்ணோட்டம் மட்டுமே என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மக்களின் அன்பையும், கண்ணோட்டத்தையுமே தனது சுய அடையாளமாகத் தவறாகப் புரிந்துகொண்டு, அதில் மயங்கித் தனது சுயத்தை இழப்பது ஒருவரைப் பெரிய சிக்கலில் ஆழ்த்திவிடும் என்று கிருத்திகா உதயநிதி எச்சரிக்கும் தோனியில் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்து நேரடியாகப் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், சமீபகாலமாகத் தன்னைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளின் மத்தியில் விஜய் முன்வைக்கும் கருத்துகளை மறைமுகமாகச் சாடுவதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

 

கிருத்திகாவின் இந்தப் பதிவு, திமுக மற்றும் தவெக ஆதரவாளர்கள் என இரு தரப்பிலும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. புகழின் உச்சத்தில் இருக்கும்போது ஒரு தலைவர் தன்னை எவ்வாறு நிதானமாக வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்கான ஆலோசனையாகவே இது பார்க்கப்படுகிறது. அரசியல் களத்தில் விமர்சனங்கள் அதிகரித்து வரும் சூழலில், கிருத்திகாவின் இந்த “சூசகமான அறிவுரை” விஜய் தரப்பில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Recommended For You

About the Author: admin