விஜய் வேறு பெண்ணை கூட்டிட்டு போயிருந்தால் அண்ணன் தங்கச்சினு சொல்லியிருப்பீங்களா?

விஜய் வேறு பெண்ணை கூட்டிட்டு போயிருந்தால் அண்ணன் தங்கச்சினு சொல்லியிருப்பீங்களா? விளாசிய பிரபலம்

மார்ச் 5ஆம் தேதியில் இருந்து விஜய் – த்ரிஷா பஞ்சாயத்துதான். அதாவது தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் இல்லத் திருமண விழாவுக்கு நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா என இருவரும் ஒரே காரில் சென்று திரும்பினர்

 

இதில் இன்னும் பலரது கவனத்தை ஈர்த்தது என்றால் அது, இருவரும் ஒரே மாதிரி மேட்சிங்காக ஆடைகள் அணிந்து சென்றது.

 

இப்படி இருக்கையில் விஜய் மற்றும் த்ரிஷா குறித்து பலரும் பல விதமாக விமர்சித்து வருகிறார்கள். விஜய் மீது விஜய்யின் மனைவி வைத்த குற்றச்சாட்டான விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கு மத்தியில் த்ரிஷாவுடன் அவர் திருமணத்திற்கு சென்றது பெரும் பேசு பொருளாக மாறியது.

 

ஏற்கனவே நடிகர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருபவரான சின்னத்திரை நடிகை சசிலயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்க்கு ஆதரவாக மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ” நடிகர் விஜய் த்ரிஷாவுடன் திருமணத்திற்குச் சென்றதும் பலரும் பேசு, இப்போது பேசு என்று கமெண்ட் செக்‌ஷனில் கூறி வருகிறார்கள்.

 

அண்ணன் – தங்கச்சி: நான் ஒன்று கேட்கிறேன், விஜய் த்ரிஷாவை அழைத்துக் கொண்டு செல்லாமல் வேறு யாராவது ஒரு பெண் தோழியை அழைத்துக் கொண்டு சென்றிருந்தால் நீங்கள் என்ன, அவர்கள் இருவரையும் அண்ணன் தங்கச்சி என்றா சொல்லப் போகிறீர்கள். அப்போதும் இப்படித்தானே சொல்லுவீர்கள். அப்படி இருக்கும்போது நீங்கள் யாரை அவர் அழைத்துச் சென்றாலும் அவரை கடுமையாக விமர்சிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டீர்கள், அதைத்தானே செய்து வருகிறீர்கள்.

 

நண்பர்கள்: பனை மரத்துக்கு அடியில் நின்று பால் குடித்தாலும் கள்ளு என்று சொல்லுமாம் இந்த உலகம். ஒரே காரில் வந்தார்கள் என்றும், ஒரே கலரில் டிரஸ் போட்டிருந்தார்கள் என்றும் சொல்லுகிறீர்கள், ஏன் நண்பர்கள் எல்லாம் ஒரே காரில் போக மாட்டார்களா? ஒரே நிறத்தில் டிரஸ் போட மாட்டார்களா? விஜய்யின் அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு நான் பதில் அளிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் விஜய் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச நான் தயாராக இல்லை. சங்கீதா விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார், அதற்கு நீதிமன்றம் முடிவெடுக்கும். நீதிமன்றத்தில் உள்ள விஷயத்தைப் பற்றி பேச எனக்கும் உரிமை இல்லை, யாருக்கும் உரிமை இல்லை” என்று பேசி உள்ளார். இவரது இந்த வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் இந்த வீடியோவின் கமெண்ட் செக்‌ஷனை அவர் ஆஃப் செய்து வைத்துள்ளார்.

Recommended For You

About the Author: admin