பிரான்சில் சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெற புதிய ஆன்லைன் நடைமுறை

பிரான்சில் சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெற புதிய ஆன்லைன் நடைமுறை – கட்டணம் அறிமுகம்

பிரான்சில் வெளிநாடுகளில் வாகனம் ஓட்ட விரும்பும் நபர்கள் பெறும் சர்வதேச ஓட்டுநர் உரிமம் (International Driving Permit – IDP) தொடர்பான நடைமுறையில் 2026 மார்ச் 3 முதல் முக்கிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 

இதுவரை இலவசமாக வழங்கப்பட்ட இந்த சேவைக்கு இப்போது கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், விண்ணப்பிக்கும் நடைமுறையும் முழுமையாக ஆன்லைன் முறையாக மாற்றப்பட்டுள்ளது.

 

இதற்கான விண்ணப்பத்தை அரசு வழங்கும் ANTS (Agence nationale des titres sécurisés) இணையதளம் மூலம் மட்டும் செய்ய வேண்டும்.

 

புதிய நடைமுறையின் படி விண்ணப்பதாரர்கள் முதலில் France Connect அல்லது ANTS கணக்கு மூலம் தங்கள் கணக்கில் உள்நுழைய வேண்டும். அதன் பிறகு “Demander un permis de conduire international” என்ற சேவையைத் தேர்வு செய்து விண்ணப்பத்தை தொடங்கலாம்.

 

விண்ணப்பிக்கும் போது செல்லுபடியாகும் தேசிய ஓட்டுநர் உரிமம் அடையாள ஆவணம் (பாஸ்போர்ட் அல்லது அடையாள அட்டை), 6 மாதங்களுக்குள் வழங்கப்பட்ட முகவரி சான்று மற்றும் 6 மாதங்களுக்குள் எடுத்த டிஜிட்டல் புகைப்படம் (e-photo) போன்ற ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்….

 

Recommended For You

About the Author: admin