மரணம் என்பது தோல்வியல்ல அது பல வீரர்களை உருவாக்கும் விதை!

மனிதன் நினைத்திருந்தால் தன் வயதைக் காரணங்காட்டி வீரர்கள் மத்தியில் ‘உற்சாக உரை’ ஆற்றிவிட்டு கண்காணாத இடத்திற்குப் போய் பார்வையிட்டுக் கொண்டிருந்திருக்கலாம். உயிருக்கு உத்தரவாதமற்ற வீட்டில் இருந்து அவர்கள் குடும்பத்துடன் நோன்பு நோற்றுக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

குறைந்தபட்சம் அவர்கள் வீட்டுப்பெண்களாவது ‘போர்’ என்பது ஆண்களின் விளையாட்டு பெண்களாகிய எங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்று சலுகை கேட்டு குழந்தைகுட்டிகளை கூட்டிக்கொண்டு சத்தமில்லாத நகரொன்றிற்கு விடைபெற்றிருக்கலாம். மகள்,மருமகன்,பேத்தி உட்பட குடும்பமாகவே மரணத்தை எதிர்பார்த்து காத்திருந்துள்ளனர்.

பாதுகாப்பாய் இருந்துகொண்டு கடல் கடந்தொரு போர் நடத்தும் ஒருத்தனும்
அடுத்த நாட்டு குடிமகனை தன் வெறிக்கு பலியாக்கும் ஒருத்தனும் கற்றுக்கொள்ள வேண்டும் வீரமென்றால் என்னவென்று!

தீவுகளில் கூடி போதையில் ஆடி குழந்தைகளை காமப்பலியாக்கி இளம்பெண்களை புத்தி பேதலித்தவர்களாக அலையவிட்டிருக்கும் எப்ஸ்டீன் கூட்டாளிகள் தங்களது கயமைகளை மறைத்துக்கொள்ள இன்று உங்களை குடும்பத்துடன் காவு கொடுத்திருக்கின்றனர். உங்களது குடும்பத்து மரணம் இன்று உலகச் செய்தியாகியிருக்கிறது.

நாற்பது நாளல்ல வரவிருக்கும் நான்காயிரம் ஆண்டுகளுக்கும் கூட மண்ணுக்காய் உரமாகிப்போன உங்களையும் உங்களது குடும்பத்தாரையும் உங்கள் மக்கள் மட்டுமல்ல நாங்களும் நினைவுகூர்ந்து வரலாறுகளில் பதித்துக்கொண்டேயிருப்போம். கடலாழி சூழ்ந்து எங்கள் உடல் கரைந்து போனாலும் கில்காமெஷின் சரித்திரம் வெளிப்பட்டது போல எங்களது ஏடுகளும் ஒருநாள் உங்களைப் பற்றிக் கூறுவதற்கு வெளிப்படலாம்!

மரணம் என்பது தோல்வியல்ல அது பல வீரர்களை உருவாக்கும் விதை!

இனி எங்களது எண்ணங்களிலும் எழுத்துக்களில் உங்களது வாழ்க்கை தான் கதை!

முத்தமிடமுடியவில்லை முடிவுரை எழுத மனதில்லை; போய் வாருங்கள் நாம் மறுமைக்கானவர்கள்!

Recommended For You

About the Author: admin