கந்துவட்டி கொடுமை: கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்ற முன்னாள் பெண் போராளி! – மன்னாரில் ஒரு துயரம்.

கந்துவட்டி கொடுமை: கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்ற முன்னாள் பெண் போராளி! – மன்னாரில் ஒரு துயரம்.

யுத்தக் களத்தில் ஒரு காலை இழந்து, இன்று வாழ்வாதாரத்திற்காகப் போராடும் ஒரு முன்னாள் பெண் போராளிக்கு நேர்ந்த அவலம் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. மன்னார் மூர் வீதியில் இயங்கும் சட்டவிரோத கந்துவட்டி கும்பலின் பிடியில் சிக்கி, தனது ஒரு சிறுநீரகத்தையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் இப்பெண்மணி.

📍 மன்னார் மூர் வீதியில் வசிக்கும் இவர், தனது குடும்ப வறுமையைப் போக்கி சிறு தொழில் செய்வதற்காக ‘சீட்டு’ முறையில் பணம் பெற்றுள்ளார். ஆனால், ஆரம்பத்தில் கனிவாகப் பேசிய கும்பல், பின்னர் வட்டிக்கு மேல் வட்டி (Compound Interest) போட்டு அவரை மீள முடியாத கடன் சுமைக்குள் தள்ளியுள்ளது.

💔 உணவகங்களுக்கு சிற்றுண்டி தயாரித்து வழங்கி வரும் மிகச்சிறிய வருமானத்தில் வாழ்ந்து வரும் இவருக்கு, கந்துவட்டி கும்பல் விடுத்த கொலை மிரட்டல்கள் தாங்க முடியாதவை.

வேறு வழியின்றி, கொழும்புக்குச் சென்று தனது ஒரு சிறுநீரகத்தை விற்று அந்தப் பணத்தை வட்டிக்கு வழங்கியுள்ளார்.

ஆனாலும், “இன்னும் வட்டி மீதமுள்ளது” என அந்த கும்பல் இன்றும் அவரைத் துரத்தி வருகிறது.

“என்னைப் போல இன்னும் பல பெண்கள் இங்கே பாதிக்கப்பட்டுள்ளார்கள். எங்களைக் காப்பாற்ற யாரும் இல்லையா?” என கண்ணீர் மல்கக் கேட்கிறார் இப்பெண்மணி.

⚖️ மன்னார் பகுதியில் தங்கு தடையின்றி இயங்கும் இந்த சட்டவிரோத வட்டி கும்பல்கள் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலை எண்ணம் தோன்றும் அளவிற்கு மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள இவருக்கு நீதியும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும்.

🤝 பாதிக்கப்பட்ட இந்தச் சகோதரிக்கு உதவ முன்வருபவர்கள், நேரடியாக அவரது தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

தொலைபேசி இலக்கம்-+94 77 763 2388

சமூக விழிப்புணர்வுக்காக இதனைப் பகிருங்கள்!

Recommended For You

About the Author: admin