இந்தோ-பசிபிக் பிராந்திய பாதுகாப்பிற்காக ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்கா கைகோர்ப்பு!
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, சுதந்திரம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆயுதப் படைகள் இணைந்து ஒரு பிரம்மாண்ட கூட்டு கடற்படை பயிற்சியை (Maritime Cooperative Activity – MCA) மேற்கொண்டுள்ளன.
🗓️ பெப்ப்ரவரி 15 – 16, 2026 ல் பிலிப்பைன்ஸின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் (Exclusive Economic Zone – EEZ). இடம்பெற்றுள்ளன.
பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் சர்வதேச கடல்சார் சட்டங்களுக்கு மதிப்பளித்தல் இதன் நோக்கமாக கொள்ளப்பட்டுள்ளது.
⚓ இந்த கூட்டுப் பயிற்சியில் மூன்று நாடுகளின் அதிநவீன போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் பங்கேற்றன:
ஆஸ்திரேலியா: HMAS Toowoomba போர்க்கப்பல் மற்றும் P-8A போஸிடான் விமானம்.
பிலிப்பைன்ஸ்: BRP Diego Silang, BRP Teresa Magbanua கப்பல்கள் மற்றும் FA-50 போர் விமானங்கள்.
அமெரிக்கா: USS Dewey (அழிப்புக் கப்பல்) மற்றும் P-8A போஸிடான் கடல்சார் ரோந்து விமானம்.
“இந்த நடவடிக்கை, சர்வதேச கடல்சார் சட்டங்களின்படி கப்பல் போக்குவரத்து மற்றும் வான்வழிப் பயண சுதந்திரத்தை நிலைநாட்டும் எங்களின் உறுதியை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.”
இந்தக் கூட்டுப் பயிற்சியானது நாடுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை அதிகரிப்பதுடன், எதிர்கால பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளவும் வழிவகுக்கும்.

