காங்கேசன்துறை கடற்பரப்பில் பரபரப்பு: 25 இந்திய மீனவர்கள் கைது!

காங்கேசன்துறை கடற்பரப்பில் பரபரப்பு: 25 இந்திய மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள், அவர்களது இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு காங்கேசன்துறை கடற்படையினர் மேற்கொண்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது, எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்த மீனவர்கள் பிடிபட்டனர்.

 

காங்கேசன்துறைக்கு அருகாமையிலுள்ள கடல் பகுதியில் படகோட்டிகள் உட்பட 25 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர். 2 இழுவை படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

கைது செய்யப்பட்ட மீனவர்களும் அவர்களது படகுகளும் கரைக்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினர் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை அண்மைக்காலமாக தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin