களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் 32 வயது நபர் மரணம்

களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் 32 வயது நபர் மரணம்

– சிறிய உணவகம் ஒன்றின் முன்பாக சம்பவம்

களுத்துறை, ஜிந்துப்பிட்டி பகுதிகளில் இடம்பெற்ற இரு வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் மரணமடைந்துள்ளதோடு, மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

களுத்துறை வடக்கு, வாடியமங்கட பகுதியில் நேற்று (14) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், களுத்துறை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு (14) 7.50 மணியளவில், வாடியமங்கடவில் உள்ள இலக்கம் 01 புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள வீதியில் சிறிய உணவகம் ஒன்றிற்கு முன்னால், அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர், நபர் ஒருவரை இலக்குவைத்து துப்பாக்கிச் சூடு முன்னெடுத்துள்ளார்.

வாடியமங்கட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் பலத்த காயமடைந்து நாகொட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கு கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருப்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Recommended For You

About the Author: admin