மக்களுக்கான மகிழ்ச்சி செய்தி

மக்களுக்கான மகிழ்ச்சி செய்தி

வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள காணிகளில் சில பகுதிகளை ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் பயணிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக வட மாகாணத்தில் மக்களுடைய தனியார் காணிகள் பாதுகாப்பு தேவைக்காக பாதுகாப்பு தரப்பினரால் பொறுப்பேற்கப்பட்டது.

யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்த நிலையில் மக்களுடைய காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பது தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் கரிசனை கொண்டுள்ளோம்.

வுலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள தனியார் காணிகளை படிப்படியாக உரியவர்களுக்கு பெற்று கொடுக்கும் வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் வலிகாகமம் வடக்கின் சில பகுதிகளை மக்களிடம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலுக்கு அமைய பாதுகாப்பு அமைச்சு முன்னெடுத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin