வெனிசுலா ஜனாதிபதி மதுரோவை பிடிக்க களமிறங்கிய AI!
அறத்தை இழந்தது பென்டகன்?
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் (Nicolas Maduro) கைது செய்ய அமெரிக்காவின் பென்டகன் (Pentagon) மேற்கொண்ட அதிரடி இராணுவ நடவடிக்கையில், Claude என்ற செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன!
🔍 அமெரிக்காவின் முன்னணி AI நிறுவனமான Anthropic-ன் ‘Claude’ மொடல். தரவு பகுப்பாய்வு நிறுவனமான Palantir Technologies மூலமாக இந்த AI கருவி அமெரிக்க பாதுகாப்புத் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் கராகஸில் (Caracas) நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தேடுதல் வேட்டையின் போது, உளவுத் தகவல்களை ஒருங்கிணைக்கவும் திட்டமிடவும் இந்த AI பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
‘Claude’ போன்ற AI கருவிகள் வன்முறை அல்லது இராணுவத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படக் கூடாது என்ற கொள்கை நிலவுகிறது. இருப்பினும், வகைப்படுத்தப்பட்ட (Classified) இராணுவ நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட முதல் AI மாடல் இதுவே என The Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது.
⚖️ செயற்கை நுண்ணறிவு என்பது மனிதர்களுக்கு உதவும் ஒரு கருவியாக மட்டுமே பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அது ஒரு நாட்டின் ஜனாதிபதியை கைது செய்யும் அளவுக்கு இராணுவ ரீதியாகப் பயன்படுத்தப்படுவது உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இது போன்ற தொழில்நுட்பங்கள் போர்க்களத்தில் பயன்படுத்தப்படுவதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? உங்கள் கருத்துக்களைக் கமெண்டில் பகிருங்கள்! 👇

