தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை – உற்பத்தியாளருக்கு சிறை!
யாழ்ப்பாணத்தில் மனித ஆரோக்கியத்திற்குத் தீங்கான வகையில், பங்கசு (Fungus) தொற்றுடைய கட்டைத்தூளை (Chilli Powder) உற்பத்தி செய்து விநியோகித்த நபருக்கு நீதிமன்றம் அதிரடித் தண்டனை வழங்கியுள்ளது.
உற்பத்தியாளருக்கு ஒரு மாத கால சிறைத்தண்டனை மற்றும் 20,000 ரூபாய் அபராதம். வியாபாரிக்கு: கடுமையான எச்சரிக்கை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
🔍 பொலிகண்டி பகுதியில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் மதியானந்தகுரு நந்தகுமார் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கட்டைத்தூள் பங்கசு படிந்து பழுதடைந்திருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தரமற்ற பொருளை விற்பனை செய்த கடை உரிமையாளர் மற்றும் அதைத் தயாரித்த உற்பத்தியாளர் ஆகிய இருவர் மீதும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் போது இருவரும் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
💡உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் படி, நுகர்வோர் தரம் குறைந்த அல்லது சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் குறித்து அந்தந்தப் பகுதி பொதுச்சுகாதாரப் பரிசோதகரிடம் (PHI) புகார் அளிக்க முடியும். உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்!

