கௌதம புத்தரும் – அநுர – மோடி பிணைப்பும், இலங்கை இந்திய உறவும் – ஒரு வரலாற்றுத் திருப்பம்!
வரலாற்றுச் சிறப்புமிக்க தேவ்னிமோரி புனித புத்தர் தாதுக்கள்: இந்திய உயர்மட்டக் குழு இலங்கை வருகை! 🇮🇳🇱🇰
இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட புனித தேவ்னிமோரி (Devnimori) தாதுக்களை மீண்டும் இந்தியாவிற்கு எடுத்துச் செல்வதற்காக, மத்தியப் பிரதேச ஆளுநர் மாண்புமிகு மங்குபாய் படேல் மற்றும் அருணாச்சலப் பிரதேச துணை முதலமைச்சர் சௌனா மெய்ன் ஆகியோர் தலைமையிலான உயர்மட்ட இந்தியக் குழு இன்று (பிப்ரவரி 09) இலங்கை வந்தடைந்தது.
🛬 விமான நிலையத்தில் வரவேற்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இக்குழுவினரை, ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.
📜 இரு நாட்டு உறவு: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கைப் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வக் கலந்துரையாடலைத் தொடர்ந்து, இந்தப் புனிதத் தாதுக்கள் கடந்த பிப்ரவரி 4ஆம் திகதி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன.
இந்தியாவின் குஜராத் மாநிலம், பரோடா (Baroda) அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இப்புனித தாதுக்கள், வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவுக்கு வெளியே காட்சிப்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
கொழும்பு, ஹுனுபிட்டி கங்காராம விகாரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இப்புனித தாதுக்களை, பிப்ரவரி 5 முதல் 11 வரை 24 மணிநேரமும் பொதுமக்கள் தரிசிப்பதற்கு அரிய வாய்ப்பு வழங்கப்பட்டது.
🔄 இலங்கை வாழ் பௌத்த மக்களின் ஆன்மீக வழிபாட்டிற்காகக் கொண்டுவரப்பட்ட இப்புனித தாதுக்கள், வரும் பிப்ரவரி 11, 2026 அன்று இந்திய உயர்மட்டக் குழுவின் மேற்பார்வையில் பாதுகாப்பாக மீண்டும் இந்தியாவிற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.
இந்த நிகழ்வானது இந்தியா மற்றும் இலங்கை இடையிலான ஆழமான கலாச்சார மற்றும் ஆன்மீகப் பிணைப்பை மீண்டும் ஒருமுறை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.


