அடுத்த ஆண்டு உலகப் பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம் அதிகம் என உலக வங்கியின் (World Bank) தலைவர் டேவிட் மல்பாஸ் நேற்றைய தினம் (10-10-2022) தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் நேற்றைய தினம் (10) சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியின் 2022 ஆண்டு கூட்டு மாநாடு ஆரம்பமானது.
அப்போது உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.