காரைதீவு பிரதேச சபையில் சுதந்திர தின நிகழ்வு!

காரைதீவு பிரதேச சபையில் சுதந்திர தின நிகழ்வு!

காரைதீவு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் 78வது தேசிய சுதந்திர தின விழா இன்று (4) காரைதீவு சபை வளாகத்தில் உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயீல் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது உப தவிசாளர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, விஷேட உரையையும் நிகழ்த்தினார். அத்துடன் நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

 

பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் சிரமதானப்பணியிலும் ஈடுப்பட்டனர்.

 

இவ்விழாவில், பிரதித் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்களான எம்.என்.எம். ரணீஸ், கே.எல். ஹில்மி, கே. செல்வராணி, சபை செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: admin