“சுதந்திர தினம் எமக்குக் கரிநாள்! – பேரணிக்கு அணிதிரள்வோம்”!

“சுதந்திர தினம் எமக்குக் கரிநாள்! – பேரணிக்கு அணிதிரள்வோம்”! யாழ் பல்கலைக்கழ மாணவர்கள் அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினத்தை “கரிநாள்” எனப் பிரகடனப்படுத்தி, வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் எழுச்சிப் பேரணிக்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து வலுச்சேர்க்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (01.02.26) யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் மற்றும் முகாமைத்துவ வணிகப்பீட மாணவர் ஒன்றியம் இணைந்து இந்த அறைகூவலை விடுத்தன.

தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்படும் நிலையில், இந்த சுதந்திர தினத்தை கொண்டாடுவதில் அர்த்தமில்லை என மாணவர்கள் சுட்டிக்காட்டினர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கப் பிரதிநிதிகளும் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு, தமது நீதிக்கான போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் பொதுமக்களைப் பங்கேற்குமாறு கோரியுள்ளனர்.

கட்சி, மத, பேதங்களைக் கடந்து ஒட்டுமொத்தத் தமிழ் சமூகமும் இந்தப் பேரணியில் பங்கேற்று எமது ஒருமித்த குரலை உலகிற்கு உரக்கச் சொல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

“எமது மண்ணில் எமக்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்”!

Recommended For You

About the Author: admin