காரைநகரில் வீதிப் புனரமைப்புப் பணிகள் தீவிரம்: 10 வீதிகள் புதிய பொலிவு பெறுகின்றன!
யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, குன்றும் குழியுமாக இருந்த 10 முக்கிய வீதிகள் 44.5 மில்லியன் ரூபாய் செலவில் மிகத் துரிதமாகப் புனரமைக்கப்பட்டு வருகின்றன
புனரமைப்புப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிபவனந்தராசா அவர்கள் நேரில் சென்று பணிகளின் தரத்தைப் பார்வையிட்டார்.
பெரும்பாலான வீதிகளின் புனரமைப்புப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நீண்டகாலமாகப் போக்குவரத்துச் சிரமங்களை எதிர்கொண்டு வந்த காரைநகர் மக்களுக்குச் சுமுகமான போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்தல் இதன் முக்கியமாக நோக்கமாகும்.
புனரமைப்பு செய்யப்படும் வீதிகள் பின்வருமாறு,
01.சயம்பு வீதி – 600 மீட்டர்
02.பொன்னம்பலம் வீதி – 300 மீட்டர்
03.ஒளிச்சுடர் Sports Club வீதி – 500 மீட்டர்
04.விளானை கனவோடை திக்கரை வீதி – 500 மீட்டர்
05.UNDP RDS வீதி – 377 மீட்டர்
06.வேம்படி 1ம் ஒழுங்கை – 130 மீட்டர்
07.வியாவில் தீர்த்தக்கரை வீதி – 277 மீட்டர்
08.ஊரி முருகன் கோவில் 1ம் ஒழுங்கை – 179 மீட்டர்
09.பயிரிக்கூடல் முருகன் கோவில் வீதி – 271 மீட்டர்
10.VTA வீதி – 200 மீட்டர்
இந்தப் புனரமைப்புப் பணிகள் நிறைவடைவதன் மூலம் காரைநகர் வாழ் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அன்றாடப் போக்குவரத்து வசதிகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது


