பொலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது, ‘காந்தாரா’ திரைப்படம் மற்றும் அதிலுள்ள ஆன்மீகக் கூறுகளைக் கேலி செய்ததாகக் கூறப்படும் புகார்

பொலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது, ‘காந்தாரா’ திரைப்படம் மற்றும் அதிலுள்ள ஆன்மீகக் கூறுகளைக் கேலி செய்ததாகக் கூறப்படும் புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

கடவுள் நம்பிக்கை மற்றும் கலாச்சார விழுமியங்களை அவமதிக்கும் வகையில் ரன்வீர் சிங் பேசியதாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) இறுதி நாளில் ரன்வீர் சிங் தொகுப்பாளராகப் பணியாற்றினார். அப்போது ‘காந்தாரா’ திரைப்படத்தின் வெற்றியைக் குறிப்பிட்ட ரன்வீர், படத்தில் வரும் புகழ்பெற்ற ‘வராஹ ரூபம்’ சத்தத்தையும் (கடவுள் எழுப்பும் ஒலி), அதன் ஆன்மீகப் பின்னணியையும் கிண்டல் செய்யும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 295A பிரிவின் கீழ் (மத உணர்வுகளைப் புண்படுத்துதல்) இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், ரன்வீர் சிங் விசாரணைக்கு நேரில் முன்னிலையாக வேண்டிய சூழல் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin