அருச்சுனா இராமநாதனுக்கு அச்சுறுத்தல் – 6 பேருக்குப் பிணை!
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனுக்குத் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் வழக்கில், மூன்று முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆறு பேருக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.
இந்த விவகாரம் கடந்த டிசம்பர் மாதம் முதல் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக இருந்து வருகிறது.
கடந்த டிசம்பர் 24ஆம் திகதி, வலி. தெற்கு பிரதேச சபை உறுப்பினர்களான வரதராசா தனகோபி, சிவரூபன் லகீந்தன், மனோகரன் பிரதீபன் உள்ளிட்ட ஆறு பேர் தன்னைத் தொலைபேசியில் மிரட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் தெல்லிப்பழை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், டிசம்பர் 26ஆம் திகதி ஆறு பேரிடமும் தனித்தனியாக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு, பின்னர் மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்தநிலையில்இன்று (ஜனவரி 29) மல்லாகம் நீதிவான் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சந்தேகநபர்கள் அனைவரும் நீதிமன்றில் முன்னிலையாகினா் .
வழக்கை விசாரணை செய்த நீதிவான், அவர்கள் அறுவரையும் பிணையில் செல்ல அனுமதித்ததுடன், அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.


