வெனிசுலா எண்ணெய் விற்பனை – அமெரிக்காவின் கட்டுப்பாடும் நிதி பங்கீடும்!
அமெரிக்காவால் முடக்கப்பட்டிருந்த வெனிசுலாவின் கச்சா எண்ணெய் விற்பனை குறித்த மிக முக்கியமான தகவல்களை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.
💰 வெனிசுலாவிற்குச் சொந்தமான கச்சா எண்ணெய் சுமார் $500 மில்லியன் (50 கோடி டொலர்) மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் $300 மில்லியன் (30 கோடி டாலர்) வெனிசுலாவின் தற்போதைய இடைக்கால அரசாங்கத்திடம் (டெல்சி ரோட்ரிக்ஸ் தலைமையிலான நிர்வாகம்) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள $200 மில்லியன், கட்டாரில் உள்ள ஒரு தற்காலிக வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. இது பின்னர் அமெரிக்கக் கருவூலத்தின் (U.S. Treasury) மேற்பார்வையின் கீழ் கொண்டு வரப்படும்.
🔍 இந்த நிலை யில் வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவைத் தடுத்து, நாட்டை நிலைப்படுத்துவதற்காகவே இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அத்தியாவசியப் பணிகள்: துப்புரவுத் தொழிலாளர்கள், காவல்துறை மற்றும் அரசு ஊழியர்களின் ஊதியத்தை வழங்குதல். சுகாதாரம் மற்றும் மருந்துப் பொருட்கள் வாங்குவதற்கு முன்னுரிமை அளித்தல் என்பவை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டள்ளது.
இந்த நிதி ஊழலுக்கோ அல்லது தவறான வழிகளுக்கோ பயன்படுத்தப்படாமல் இருக்க, அமெரிக்கா ஒரு “கணக்காய்வு முறையை” (Audit process) உருவாக்கி தீவிரமாகக் கண்காணிக்கும் எனவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
🌐 வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் பதவி நீக்கத்திற்குப் பிறகு, அந்த நாட்டின் எண்ணெய் வளங்களை உலகச் சந்தைக்குக் கொண்டு வர அமெரிக்கா உதவி வருகிறது.
இதன் மூலம் கிடைக்கும் வருவாய் நேரடியாக அந்நாட்டு மக்களின் நலனுக்காகச் சென்றடைவதை உறுதி செய்வதே எங்களின் நோக்கம் என ரூபியோ நாடாளுமன்றக் குழுவிடம் விளக்கியுள்ளார்.


