கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு: EPRLF இன் முக்கிய தீர்மானங்கள்!

கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு: EPRLF இன் முக்கிய தீர்மானங்கள்!

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), தமிழ் தேசியக் கட்சிகளுடன் இணைந்து கிவுல்ஓயா (Kivul Oya) நீர்ப்பாசனத் திட்டத்தை முறியடிக்கப் போவதாக அறிவித்துள்ளது. கட்சியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்ற அரசியல் குழுவின் மெய்நிகர் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டம், தமிழ் நிலங்களை அபகரிக்கும் நோக்கம் கொண்டது என EPRLF சுட்டிக்காட்டியுள்ளது.

சுமார் 23,500 கோடி ரூபாய் செலவில் அமுல்படுத்தப்படவுள்ள இத்திட்டம், புதிய சிங்களக் குடியேற்றங்களை உருவாக்குவதற்கான ஒரு முயற்சி என EPRLF குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு எதிராகத் திட்டமிடப்பட்டுள்ள அனைத்துப் போராட்டங்களிலும் கட்சி நேரடியாகப் பங்கேற்கும்.

தேர்தலைத் தள்ளிப்போடும் நோக்கில் அரசு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைத்துள்ளதாகக் கவலை தெரிவிக்கப்பட்டது. தேர்தலை விரைவில் நடத்த இராஜதந்திர ரீதியாக சர்வதேச சமூகத்திற்கு (இந்தியா, கனடா, நெதர்லாந்து போன்றவை) அழுத்தம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

புதிய அரசியல் யாப்பு தொடர்பாக அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து, தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் ஒருமித்த தீர்வுத் திட்டத்தை அரசிடம் கையளிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

நாடு வங்குரோத்து நிலையில் இருக்கும்போதும், வெள்ள பாதிப்புகளால் மக்கள் அவதியுறும்போதும் இவ்வளவு பெரிய தொகையை (23,500 கோடி) குடியேற்றத் திட்டங்களுக்கு அரசு எவ்வாறு செலவிட முடியும் என்ற கேள்வியையும் EPRLF எழுப்பியுள்ளது.

Recommended For You

About the Author: admin