கச்சதீவு திருவிழா 2026 : ஆரம்பகட்டப் பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு!

கச்சதீவு திருவிழா 2026 : ஆரம்பகட்டப் பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு!

கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்தத் திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளைக் கண்காணிப்பதற்கான உத்தியோகபூர்வ பயணம் இன்று (ஜனவரி 28, 2026) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை கடற்படையினரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் இந்த ஏற்பாடுகள், பக்தர்களின் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

நெடுந்தீவு பிரதேச செயலாளர் என். பிரபாகரன், கச்சதீவு திருத்தலப் பரிபாலகர் அருட்பணி பி. பத்திநாதன் அடிகளார், பிரதேச சபைத் தவிசாளர் ச. சத்தியவரதன் மற்றும் கடற்படை உயரதிகாரிகள் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

திருவிழாவிற்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கான குடிநீர் வசதி, தற்காலிக தங்குமிடங்கள், படகுத் துறை மேடை புனரமைப்பு மற்றும் சுகாதார வசதிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் கச்சதீவு திருவிழாவிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை இலங்கை கடற்படை முன்னின்று செய்து வருகின்ற நிலையில், இம்முறையும் ஆரம்பகட்டப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தத் திருவிழாவானது இலங்கை மற்றும் இந்திய மீனவர்களிடையேயான நல்லுறவையும், ஆன்மீகப் பிணைப்பையும் வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

Recommended For You

About the Author: admin