இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம்: வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது! 

இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம்: வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது!

இன்று உலக வர்த்தக வரலாற்றில் ஒரு மிக முக்கியமான நாள்! சுமார் 18 ஆண்டுகால நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோரால் அறிவிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், “ஒப்பந்தங்களின் தாய்” (Mother of all deals) என்று வர்ணிக்கப்படுகிறது.

📈 இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இந்த ஒப்பந்தம் சுமார் 200 கோடி மக்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டமைப்பை உருவாக்குகிறது.

இந்தியாவின் 99% க்கும் அதிகமான ஏற்றுமதி பொருட்களுக்கு ஐரோப்பிய சந்தையில் வரிச்சலுகை கிடைக்கும். குறிப்பாக ஜவுளி, தோல் பொருட்கள் மற்றும் கடல் உணவுகளுக்கு பெரும் வாய்ப்பு!

ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் (110% வரி 10% ஆகக் குறைப்பு), ஒயின், ஆலிவ் ஆயில் மற்றும் இயந்திரங்களின் விலை இந்தியாவில் கணிசமாகக் குறையும். அடுத்த சில ஆண்டுகளில் ஜவுளி மற்றும் உற்பத்தித் துறையில் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பசுமை ஆற்றல் மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுக்கு சுமார் €500 மில்லியன் நிதியுதவி வழங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதுடன், உலக வர்த்தகத்தில் இந்தியாவின் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது. 🇮🇳✨

#IndiaEUFTA #TradeAgreement #EconomicGrowth #ModiInEU #GlobalTrade #IndiaBusiness #EuropeanUnion #MakeInIndia #HistoricDeal #TamilNews #BusinessUpdates

Recommended For You

About the Author: admin