யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சாராய விற்பனை: 21 போத்தல்கள் மீட்பு – ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சாராய விற்பனை: 21 போத்தல்கள் மீட்பு – ஒருவர் கைது!

யாழ்ப்பாணம், அராலி பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

காவல்துறை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 21 கால் போத்தல் சாராயமே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. ஒரு கால் போத்தல் சாராயத்தை 1000 ரூபாய் என்ற அதிக விலைக்கு அவர் விற்பனை செய்து வந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் மதுபான விற்பனைக்கு எதிராக யாழ். மாவட்ட காவல்துறையினா் தமது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tag Words: #JaffnaNews #IllegalLiquor #PoliceArrest #Vatukottai #CrimeUpdate #JaffnaPolice #LKA #LiquorSeizure #Araly

Recommended For You

About the Author: admin