மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்..!
மன்னார் பிரதேசத்தில் தனியார் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள 50 மெகாவொட் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
மன்னாரின் இயற்கை காற்று சக்தியைப் பயன்படுத்தும் அதிநவீன தொழில்நுட்பத்துடனான இக்காற்றாலை மின்நிலையம் 10 விசையாழிகளைக் (Turbines) கொண்டுள்ளதுடன், இதன் வருடாந்த மின் உற்பத்தி 207,000,000 கிலோவொட் மணித்தியாலங்களாகும். இத்திட்டம் 2027 மார்ச் மாதத்தில் நிறைவு செய்யப்படவுள்ளது.
புதிப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் நாட்டை வலுப்படுத்துவதற்கு வழங்கப்படும் பங்களிப்பையும், அதேபோன்று இந்தத் திட்டத்துடன் இணைந்ததாக தனியார் நிறுவனம் அப்பகுதி மக்களுக்காக இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளையும் பெரிதும் பாராட்டுவதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

