காத்தான்குடி வாவியில் கரை ஒதுங்கிய இராட்சத முதலை..!
காத்தான்குடி வாவியில், சுமார் 12 அடி நீளமான இராட்சத முதலையொன்று இறந்த நிலையில் நேற்று (14) இரவு கரை ஒதுங்கியுள்ளது.
குறித்த வாவியில் கடந்த 15 நாட்களுக்குள் முதலை ஒன்று சடலமாக மீட்கப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த மாத இறுதியில் இதே பகுதியில் மற்றொரு இராட்சத முதலை இறந்த நிலையில் கரை ஒதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாவியில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாகப் பொதுமக்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்குத் தொடர்ந்து முறைப்பாடுகளை அளித்து வந்த நிலையிலேயே, தற்போது இரண்டாவது முதலையும் இவ்வாறு இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 12 அடி நீளம் கொண்ட இந்த முதலையைப் பார்வையிடுவதற்காகப் பொதுமக்கள் பெருமளவில் அங்கு கூடி வருவதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

