நல்லூரான் வளைவுக்கு அருகில் அசைவ உணவகங்களுக்கு தடை..!

நல்லூரான் வளைவுக்கு அருகில் அசைவ உணவகங்களுக்கு தடை..!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள யாழ் வளைவு மற்றும் நல்லூரான் வளைவு ஆகியவற்றுக்கு அருகில் அசைவ உணவகங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை என நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் அமர்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தவிசாளர் ப. மயூரன் தலைமையில் நடைபெற்றது.

 

அதன் போது யாழ்ப்பாணத்தின் நுளைவு வாசலாக இருக்கின்ற செம்மணி வளைவு பகுதியில் எமது சமய காலசாரங்களை பிரதிபலிக்கின்ற நல்லூரான் செம்மணி வளைவு, சிவலிங்கம் மற்றும் கோவில்கள் ஆகியன காணப்படுவதன் அடிப்படையில் அச் சூழலில் அசைவ உணவங்கள், விடுதிகள், விருந்தகங்கள் போன்ற அச்சூழலுக்கு பொருத்தமில்லாத வியாபார நிலையங்களினை நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குள் உள்ள பகுதிக்குள் அமைப்பற்குரிய அனுமதியினை நல்லூர் பிரதேச சபை வழங்காது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin