டக்ளசின் கைதின் மூலம் துணை ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது..!

டக்ளசின் கைதின் மூலம் துணை ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது..!

இலங்கை அரசாங்கத்தின் கீழ் துணை ஆயுதக் குழுக்களுக்களாக செயற்பட்டவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கியது உண்மை என்பதை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் கைது உறுதிப்படுத்தியுள்ளது என தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும், யாழ் . மாநகர சபா உறுப்பினருமான சுவீகரன் நிசாந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ் . ஊடக அமையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

 

மேலும் தெரிவிக்கையில்.

 

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று பாதாள குழுக்களின் கைகளில் சென்றது தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

 

அவரது கைது அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட கைதாக இருந்தாலும் இலங்கை பொலிஸார் இராணுவத்தை காட்டிக்கொடுத்த சந்தர்ப்பம் இதுவாகும்.

 

இலங்கை அரசாங்கத்தின் கீழ் துணை ஆயுதக் குழுக்களுக்களாக செயற்பட்டவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கியது உண்மை என்பதை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் கைது உறுதிப்படுத்தியுள்ளது.

 

இலங்கையில இடம் பெற்ற இராணுவத்தின் போர் குற்ற விசாரணைகள் தொடர்பில் சர்வதேச விசாரணையை தமிழர் தரப்பு எதிர்பார்த்து இருக்கின்ற வேளையில் முன்னாள் அமைச்சரின் வாக்குமூலங்கள் இராணுவ குற்றங்களுக்கு ஆதாரமாக கொள்ளலாம்.

 

கைது செய்யப்பட்ட அமைச்சருக்கு உத்தியோபூர்வமாக பாதுகாப்பு அமைச்சு ஆயுதம் வழங்கியது இதன் மூலம் அம்பலமாக உள்ள நிலையில் குறித்த ஆயுதங்கள் யாருடைய தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டது தொடர்பில் விரிவான விசாரணை வேண்டும்.

 

அதேபோல் ஒரு கட்சியினுடைய தலைவருக்கு அதிகளவிலான ஆயுதங்களை வழங்கிய கடந்த கால பாதுகாப்பு அமைச்சர்கள் ,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்கள், மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் தொடர்பிலும் இலங்கையில் விசாரணை மேற்கொள்வது மட்டுமல்லாது சர்வதேச நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

 

ஆகவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கைதை சாதாரண ஒரு விடயமாக நோக்காமல் புலம் பெயர் தமிழ் அமைப்புகள் இந்த விவகாரத்தை சர்வதேச நீதியாக கையாள வேண்டுமென மேலும் தெரிவித்தார்

Recommended For You

About the Author: admin