கடந்த 12 மாதங்களில் 114 துப்பாக்கி சூடு ; 60 பேர் படுகொலை..!

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் போது 60 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களில் பெரும்பாலானவை பாதாள உலக கும்பல்களுக்கு இடையிலான தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளது என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin