வரலாற்று சாதனை: 4,500 டொலரைத் தாண்டியது தங்கம் விலை!
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக ஒரு ட்றோய் அவுன்ஸ் (Troy Ounce) தங்கத்தின் விலை 4,500 அமெரிக்க டொலர்களைக்கடந்து சாதனை படைத்துள்ளது.
முக்கிய தகவல்கள்:
புதிய உச்சம்: இன்று (24) காலை நிலவரப்படி, உலகச் சந்தையில் ஒரு ட்றொய் அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,510 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
காரணங்கள்: உலகளாவிய அரசியல் பதற்றங்கள், முக்கிய நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை இருப்பு வைக்க ஆர்வம் காட்டுவது மற்றும் அமெரிக்க டொலரின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
முதலீட்டாளர்களின் ஆர்வம்: பங்குச் சந்தைகளில் நிலவும் நிலையற்ற தன்மையால், பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
தங்கத்தின் இந்த அதீத விலை உயர்வு காரணமாக, இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உள்ளூர் சந்தைகளிலும் ஆபரணத் தங்கத்தின் விலை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

