சூறாவளி சேதம்: இந்திய இராணுவத்தின் விரைவு நடவடிக்கை!

சூறாவளி சேதம்: இந்திய இராணுவத்தின் விரைவு நடவடிக்கை!

மஹியங்கனையில் தகவல் தொடர்பை மீட்டெடுக்க இலங்கை ரெலிகொம்முக்கு உதவிய இந்திய சத்ருஜீத் பிரிகேட்

சமீபத்தில் ஏற்பட்ட சூறாவளியால் மஹியங்கனை பகுதியில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில், சேதமடைந்த ஒப்டிகல் ஃபைபர் கேபிளை (OFC) விரைந்து பழுதுபார்க்கும் பணியில் இந்திய இராணுவ சமிக்ஞையாளர்கள் ஈடுபட்டனர்.

 

இலங்கை ரெலிகொம் நிறுவனத்தின் அவசர கோரிக்கையை ஏற்று, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக தகவல் இணைப்பை ஏற்படுத்த இந்திய இராணுவத்தின் சத்ருஜீத் பிரிகேட் ஒருங்கிணைந்த பணிக்குழு வெற்றிகரமாக நடவடிக்கையில் இறங்கியது.

 

இந்திய உயர் ஆணையக அறிக்கை:

 

இந்தச் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த இந்தியத் தூதரகம், மனிதாபிமான உதவி மற்றும் மருத்துவச் சேவைகளுக்கு அப்பால், அவசர செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான இத்தகைய முயற்சிகளில் இலங்கை மக்களுடன் இந்தியா உறுதியாக நிற்கிறது என்று தெரிவித்துள்ளது.

 

இந்தத் துரித நடவடிக்கை, மிக முக்கியான நேரத்தில் தகவல் தொடர்பு இணைப்பை மீட்டெடுக்க உதவியதுடன், அவசர உதவிகள் மக்களுக்குச் சென்றடைவதற்கும் வழிவகுத்தது.

Recommended For You

About the Author: admin