அமெரிக்காவால் எண்ணெய் கப்பல் கொள்ளை..!

அமெரிக்காவால் எண்ணெய் கப்பல் கொள்ளை..!

வெனிசுலா குற்றச்சாட்டு

வெனிசுலாவின் கடற்கரையில் இருந்து அமெரிக்கப் படைகள் ஒரு எண்ணெய்க் கப்பலைப் பறிமுதல் செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிரான அமெரிக்காவின் அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளது.

வெனிசுலாவின் கடற்கரையில் பாரிய எண்ணெய்க் கப்பலை பறிமுதல் செய்துள்ளதாக ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கையை வெனிசுலா உடனடியாகக் கண்டித்துள்ளது.

இதை “சர்வதேச கடற்கொள்ளை” நடவடிக்கை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது.

முன்னதாக, வெனிசுலா ஒருபோதும் “எண்ணெய் காலனியாக மாறாது என்றும் மதுரோ அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin