யாழில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது..!
யாழ்ப்பாணத்தில் 13 வயதுச் சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய, மாமன் முறையிலான உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
43 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், இளவாலை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், கடந்த 2021ஆம் ஆண்டு 13 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கடந்த 08ஆம் திகதி மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து, பொலிஸார் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
பின்னர் அவர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது, அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது.

