திறைசேரிக்கு 100 மில்லியன் ரூபா வழங்கிய திரிபோஷ நிறுவனம்..!

லங்கா திரிபோஷ நிறுவனத்தின் இலாப ஈவாக 100 மில்லியன் ரூபா நிதி இன்று (10.12.2025) திறைசேரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தனாயக்க உள்ளிட்ட குழுவினர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்ணான்டோவிடம் இதற்கான காசோலையை கையளித்தனர்.

இந்நிகழ்வில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவும் கலந்துகொண்டார்.

Recommended For You

About the Author: admin