யாழில் திடீர் பணக்காரர் ஒருவருக்கு சம்பவம் செய்த விசேட அதிரடிப் படை..!

யாழில் திடீர் பணக்காரர் ஒருவருக்கு சம்பவம் செய்த விசேட அதிரடிப் படை..!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவரின் வீட்டில் இன்று சோதனை நடத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் உள்ள வீட்டிலேயே பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

 

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய குறித்த சோதனை நடத்தப்பட்டது.

 

சட்டவிரோதமாகச் சொத்துச் சேர்த்த சிலருக்கு எதிராக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

இதனொரு கட்டமாக குறித்த நபரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: admin